திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.14) மேலும் 63 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 932 பேர் கரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதுவரை ஆயிரத்து 282 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் 40 ஆயிரத்து 236 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆயிரத்து 888 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். கூடுதலாக 3 ஆயிரத்து 869 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு 'வாரத்தின் சிறந்த காவலர்' பட்டம் - திருப்பத்தூர் எஸ்பி அறிவிப்பு