ETV Bharat / state

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்; குழந்தையை மீட்டு விடுதியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்!

Collector Rescue a child: திருப்பத்தூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த பெற்றோரிடம் இருந்து பெண் குழந்தையை மீட்ட மாவட்ட ஆட்சியர், அக்குழந்தையை அரசு விடுதியில் சேர்த்து அக்குழந்தை படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

Tirupathur district collector rescued the child from alcoholic parents and put in a hostel
குழந்தையை மீட்டு விடுதியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 10:45 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலு - சாவித்திரி தம்பதியினருக்கு 14, 8 மற்றும் 6 என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பாலு மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் தங்களது மூன்று பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட நேரத்திலும், பாலு மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தாய், தந்தை இருவரும் மது போதைக்கு அடிமையாகி உள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், அவர்களுடைய உறவினர்களிடமும் விசாரணை நடத்தியதில் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பிள்ளைகளுக்கு சரியான உணவு வழங்குவதில்லை, பிள்ளைகளுக்கான அன்றாட தேவைகளை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், உடனடியாக முதல் பெண் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் தங்கும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தன்னுடைய வாகனத்திலேயே அழைத்துச் சென்று தங்கி பயில்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

மேலும், இரண்டு பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு தாய் மற்றும் தந்தை இருவரும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்துவதற்கு ஏதுவாகவும், தெரிந்த தொழிலை மேற்கொள்ள கடன் உதவியை பெற்றுத் தரவும் தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார். மேலும், இவர்கள் இருவரும் திருந்துவதற்கு ஒரு வார காலம் அவகாசமும், மேலும் மீதமுள்ள இரண்டு பிள்ளைகளையும் பெற்றோரிடமே ஒப்படைத்தார்.

மேலும், இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் கண்காணித்து திரும்பவும் குடிக்கிறார்களா அல்லது இரண்டு பிள்ளைகளையும் சரி வர கவனித்துக் கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பள்ளிக்கு சரியான முறையில் அனுப்பி வைக்கிறார்களா எனவும் கண்காணித்து தன்னிடம் கூறுங்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

மேலும், இதனை மீறும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் பிள்ளைகளை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டு அரசின் பராமரிப்பில் தங்கி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தென்காசி விவசாயிகள் குறைதீர் கூட்டம்; கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.