தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நடமாடும் நியாயவிலைக் கடை வாகனத்தை சென்ற வாரம் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தர். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 நடமாடும் நியாயவிலைக் கடை வாகனங்கள் இன்று (செப்.26) தொடங்கி வைக்கப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த அண்ணாநகர் பகுதியில் நடந்த இந்நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கலந்துகொண்டு நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவனருள், "மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்த செய்ய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நடமாடும் நியாயவிலைக் கடை வாகனம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.