திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஜப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக வேலைசெய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் 11 வயதுடைய இளைய மகன் சுஹேப் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று (மே27) மாலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அமானுல்லா மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் சுஹேப் கிடைக்காததால் தந்தை அமானுல்லா தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (மே28) காலை சியாலி தெருவில் உள்ள சிறுவனின் பாட்டி வீட்டில் உள்ள மொட்டை மாடியில் சிறுவன் ஒருவர் மின்கம்பி பிடித்து விழுந்து இருப்பது அப்பகுதி மக்கள் பார்த்து அமானுல்லா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் பேரில் சிறுவனின் பெற்றோர் அங்கே சென்று பார்த்த போது சிறுவன் தனது பாட்டியின் புதிதாக கட்டப்பட்டு வரும் விட்டின் மேல்தளத்தில் விளையாடும் போது மின் இணைப்பு பைப்பை தொட்டுள்ளதாக தெரிகிறது.
மொட்டை மாடி முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் விழுந்து உயிர் பலியாகி இருப்பதை தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமிய போலீசார் மின்சாரம் தண்டித்த பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்தது தெரியாமல் இரவு முழுவதும் பெற்றோர் அவனை தேடி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குளியலறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்