ETV Bharat / state

வாக்களித்த ஆட்சியர்: திருப்பத்தூரில் 1700 போலீஸ் குவிப்பு - rural election

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. நான்கு ஒன்றியங்களுக்கு நடைபெற்றுவரும் தேர்தலில் 1700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு
திருப்பத்தூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு
author img

By

Published : Oct 6, 2021, 8:45 AM IST

Updated : Oct 6, 2021, 10:01 AM IST

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி, இரண்டு கட்ட தேர்தலாக நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்து முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு
திருப்பத்தூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு

நான்கு ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒன்பது பதவிகளுக்கும், ஒன்றிய கவுன்சிலர் 83 பதவிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் 137 பதவிகளுக்கும், 1188 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு
குடும்பத்துடன் வாக்கு செலுத்திய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது வாக்கினைச் செலுத்தினார். அதேபோல் பொதுமக்களும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது வாக்கினைச் செலுத்த காலை முதலே ஆர்வத்துடன் கலந்துவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆறாயிரத்து 311 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்து 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: முதல்கட்ட வாக்குப்பதிவு: குவிக்கப்பட்ட போலீஸ்!

Last Updated : Oct 6, 2021, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.