திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த மனிதன் என்பவர் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்க, சார் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ 1991ஆம் ஆண்டு முதல் உலக அமைதியை வலியுறுத்தி சாதாரண மனிதர்களைப் போல் உள்நோக்கி நடக்காமல் தொடர்ந்து பின்னோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறேன். 16 வருடங்கள் பேசாமல் மௌனமாக இருந்தேன்” என்றார்.
மேலும், வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், குடியரசு தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய அனைத்து பதவிகளுக்கும் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். தற்பொழுது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார். இவர்தான் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முதலாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...எழுத்தாளர் இமையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்; தலைவர்கள் வாழ்த்து