பெங்களூரு: பெங்களூருவில் இயங்கி வரும் பேட்டரி ஆட்டோ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் ரூ.32 லட்சம் மதிப்பில் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் இறக்கி அதை ஒரு தனியார் லாரி நிறுவனம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மினி லாரியை சென்னையை சேர்ந்த அருள்குமார் ஒட்டி சென்றுள்ளார். அப்போது அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தேனீர் கடை முன்பு லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுனர் தேனீர் குடிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் சிறிது நேரத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் கொண்ட மினி லாரியை கடத்தி சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் அப்பகுதி மக்களுடன் திருடி சென்ற லாரியை பிடிக்க முயன்றும் லாரியை பிடிக்க இயலாமல் மர்ம நபர் ஓட்டிச்சென்றார். சம்பவம் குறித்து அம்பலூர் காவல் நிலையத்தில் அருள் குமார் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சி.சி.காட்சிகள் அடிப்படையில் லாரியை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
வேலூர் அருகே பிடிபட்ட வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மினிலாரியை கடத்தியவர் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. உடனடியாக அவரை வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்து முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்தில் தவறவிட்ட நகை, பணத்தை உடனடியாக மீட்டுக்கொடுத்த காவல் துறையினர்!