ETV Bharat / state

தோல் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு...விவசாயிகள் வேதனை! - palaru farmers are worried

பாலாற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலகள் கழிவுநீரை கலப்பதால் ஆறு முழுவதும் நுரையாக காணப்படுகிறது. இது விவசாயத்தை கடுமையாக பாதிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தோல் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு...விவசாயிகள் வேதனை!தோல் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு...விவசாயிகள் வேதனை!
தோல் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு...விவசாயிகள் வேதனை!
author img

By

Published : Jul 20, 2022, 2:15 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூலை 19) மாலை முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால், பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

இதனை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகம் தோல் கழிவுகளை பாலாற்றில் திறந்துவிட்டுள்ளனர். இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலத்தின்கீழ் பாலாற்றில் ஓடும் நீர், அதிக அளவு நுரை பொங்கி ஓடுவதால் விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

தோல் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு...விவசாயிகள் வேதனை!

மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. அதனையும் தாண்டி பாலாற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இதனை பயன்படுத்தி தோல் ஆற்றில் தோல் கழிவுகளை தொழிற்சாலைகள் கலப்பதால் பாலாறு உப்புதன்மையாக மாறி, பாலாற்று படுகையை நம்பியுள்ள விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாணியம்பாடி மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பாலாற்றில் அதிக அளவு நீர் வரத்து இருப்பதால் பாலாறு கரையோரம் நுரை பொங்காமல் இருக்க தோல் தொழிற்சாலை நிர்வாகம் சில மருந்துகளை தெளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.