திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடையாஞ்சி வாக்குச் சாவடி மையத்தில் கூடுதல் மின்விளக்குகள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைக்கவில்லை எனத்தேர்தல் அலுவலர் (நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்) ரகுராமிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
அதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் மூலமாகவோ, மாவட்டத்தேர்தல் நிர்வாகத்தின் சார்பிலோ நிதி ஒதுக்காததால் இத்தகையப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனப் பதில் அளித்ததால், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பலத்த பாதுகாப்பு: 2 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, 2,400 காவலர் குவிப்பு