ETV Bharat / state

தற்கொலை செய்துகொண்ட காவலரின் உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்ததால் சலசலப்பு - காவலரின் உடலை ஊருக்குள் விடாமல் சுமார் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்

சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை ஊருக்குள் சேர்க்காத பொதுமக்களை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்

தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை ஊருக்குள் சேர்க்க மறுத்த பொதுமக்கள்
தற்கொலை செய்துகொண்ட காவலரின் உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்ததால் சலசலப்பு
author img

By

Published : Aug 14, 2022, 4:06 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருனாப்பட்டு ஊராட்சி திருவிக நகர் பகுதியைச்சேர்ந்தவர், ரவி என்பவரின் மகன் பிரபு(32). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் பகுதியைச் சேர்ந்த வசு(23) என்பவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் காவலராகப்பணியாற்றி வந்த பிரபு திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நேற்று அவருடைய சொந்த ஊரான இருனாப்பட்டு திரு.வி.க நகருக்கு பிரேத உடலை எடுத்து வந்த போது அப்பகுதி மக்கள் உடலை மறித்து ஊருக்குள் எடுத்து வரக்கூடாது. அது தங்கள் ஊருக்கு ஆகாது என்று கூறி இறந்து போன காவலரின் உடலை ஊருக்குள் விடாமல் சுமார் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் சக காவலர்கள் உதவியுடன் அப்பகுதி மக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சமரசம் ஆன பின்பு ஊருக்கு வெளியே சடலத்தை வைத்து ஈமச்சடங்கு காரியங்களை செய்து அருகே ஃபாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்து போன காவலரின் உடலைப் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சமரச பேச்சு வார்த்தையின்போது, பக்கத்து கிராம ஆண்டியப்பணூர் பகுதி இளைஞர்கள் சடலத்தை ஊருக்குள் விட வேண்டும் என்று காவலர்களுக்கு உதவியாக குரல் கொடுத்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிங்க: அரசுப்பேருந்து ஏ.சி. கோச்சில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் - பிடிபட்ட இருவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.