திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய ஆண்கள் உருது உயர்நிலைப்பள்ளி பழுதடைந்ததால், பள்ளியை புதுப்பித்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக் கட்டடத்தை கட்ட ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது பள்ளியின் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முஸ்லிம் ஆண்கள் உருது உயர்நிலைப் பள்ளியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சின் போது அதிமுக நகர கழக செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்