ETV Bharat / state

கதவை மூடி நடந்த கந்திலி வட்டார கவுன்சிலர் கூட்டம்..! - வட்டார வளர்ச்சி அலுவலக

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் நிருபர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஒன்றிய குழு தலைவர் கூறியதால் கவுன்சிலர் கூட்டம் கதவை மூடி நடந்தது.

கதவை மூடி நடந்த கந்திலி வட்டார கவுன்சிலர் கூட்டம்

author img

By

Published : Oct 21, 2022, 8:16 PM IST

திருப்பத்தூர்: கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் திருமதி திருமுருகன் தலைமையில் 22 கவுன்சிலர் அடங்கிய ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினங்கள் குறித்தும் கவுன்சிலர்களின் குறைகள், நிறைகள் குறித்து ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இதனைச் செய்தி சேகரிக்கச் சென்ற 10க்கும் மேற்பட்ட நிருபர்களை எவரும் செய்தி எடுக்கக் கூடாது எனக் கூறி திமுக ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி அடாவடியில் ஈடுபட்டனர். மேலும் பணியாட்களை வைத்து அலுவலக கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த பெண் கவுன்சிலரை கதவைத் திறக்காமல் பின்புற கதவின் வழியாகச் செல்ல அனுமதித்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கவுன்சிலர் கூட்டத்தில் அனைத்து நிருபர்களும் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் நிருபர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதவை மூடி நடந்த கந்திலி வட்டார கவுன்சிலர் கூட்டம்

இதையும் படிங்க:சென்னையிலிருந்து தீபாவளி சிறப்புப்பேருந்துகள் சேவை தொடக்கம் - இன்று 1,500 பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.