திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாஜகவின் மாவட்ட பிரிதிநிதிகள் மாநாடு இன்று (ஜனவரி 2) நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் எல். முருகன் பேசுகையில், "எம்ஜிஆர் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு தவிர்க்க முடியாத தலைவராக இருந்தாரோ, அதேபோல பிரதமர் மோடியும் உள்ளார். விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மத்திய அரசின் மூலம் இந்தியாவிலேயே அதிக பயன் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.
திமுகவையும் கமிஷனையும் பிரிக்க முடியாது, திமுகவும் ஊழலும் ஒன்று. திமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோயம்புத்தூரில் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு அவரை தரைகுறைவாக பேசி அழைத்துச் சென்றனர். சமூக நீதி குறித்து திமுகவினர் பேசுகின்றனர். அதற்கு திமுகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது. வேல் யாத்திரையின் வெற்றி திமுகவினரை புலம்ப செய்துள்ளது" என்றார்.