திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் பகுதியில் 49ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் இவ்விழாவில் பங்கேற்றன. போட்டி தொடங்குவதற்கு முன்பு அனைத்துக் காளைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறைந்த நேரத்தில் அதிவேகமாக ஓடிய 20க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 70,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 60,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 45,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைக் கண்டுகளித்தனர்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஐந்து பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவிற்கு 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் மாநில அளவிலான ஓப்பன் செஸ் போட்டி