திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கௌரவன் (38). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தார்.
சொந்த ஊருக்கு வந்த அவர் நண்பர் பெருமாள் (30) என்பவருடன் சேர்ந்து பொத்தான்குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு குளித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே இக்கரையிலிருந்து அக்கரைக்கு யார் முந்தி செல்கிறார்களோ அவருக்கு ஆயிரம் ரூபாய் என பேசி தண்ணீரில் நீந்திச் சென்றுள்ளனர். முதலில் பெருமாள் கரையைக் கடந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் கௌரவன் கரைக்கு வரவில்லை. அச்சமடைந்த பெருமாள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி கௌரவனை சடலமாக மீட்டனர்.
இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!