திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென்று சாலையின் நடுவே கையில் காலணியுடன் நின்றுகொண்டு, அப்பகுதியில் வரும் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். பலர் முயற்சித்தும் ஆம்புலன்ஸில் ஏற மறுத்த அப்பெண், அருகே வந்தால் தனது ஆடைகளை களைத்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பெண் மதுபோதையில் உள்ளாரா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்த முயன்றார்.
கடைசிவரை ஒத்துழைப்பு வழங்காத அப்பெண் சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப்பின் அவ்வழியாக இருச்சகர வாகனத்தில் வந்த இருவருடன் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியே சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பரபரப்பான சேஸிங்...திருடனை மடக்கி பிடித்த காவலர்கள்!