திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சார் ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினார். இந்த நாடகத்தில், பொதுமக்கள் வாக்குக்கு பணம் வாங்கி அரசியல்வாதிகளுக்கு ஊழலைக் கற்றுத் தருகிறார்கள் என்கிற கூற்று வலியுறுத்தப்பட்டது.
100 விழுக்காடு வாக்கை பொதுமக்கள் அளிக்க வேண்டும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாணவர்கள் சார் ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
100 விழுக்காடு வாக்களிக்கவேண்டும், வாக்குககள் விற்பனைக்கல்ல என்பதை வலியுறுத்தி வந்தனா கார்க் மாணவர்களிடையே பேசினார். நிகழ்வின், இறுதியில் வாக்களிப்பது குறித்து வாக்கு எந்திரத்தை கொண்டு மாணவர்களுக்கு ஒத்திகை நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையும் படிங்க: மக்காச்சோளக் காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!