திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தோல் மற்றும் காலணி பயிற்சி மையம் உருவாக்கி, வேலை வாய்ப்பு அலுவலகம் அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வாணியம்பாடி அடுத்துள்ள கோனாமேடு என்ற இடத்தில் வேலை வாய்ப்பு அலுவலகமும், ஆலங்காயம் சாலையில் கட்டப்பட்ட வரும் தொழிற்பயிற்சி கல்லூரியும் ஆகியவற்றின் கட்டடப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகளை தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று (டிச.11) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலின்போது வாணியம்பாடி தொகுதி மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 4 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் இங்கு அரசு தொழில்நுட்பக் கல்லூரி கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அலுவலகம் விரைவில் வாணியம்பாடியில் அமைக்கப்டும். வாணியம்பாடி பகுதியில் தோல் தொழிற்சாலை மற்றும் காலணி தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளதால் சிட்கோ இடத்தில் காலணி தொழிற் பயிற்சி மையம் உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!