ETV Bharat / state

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள்

author img

By

Published : Apr 25, 2020, 11:09 PM IST

திருப்பத்தூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள்
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள்

கரோனா நோய் தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், குணமாகி செல்லபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களை சிறிது ஆறுதல் அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 17 பேர் குணாமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவமனை டீன் செல்வி ஆகியோர் பழக்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 79 பேரில் 58 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் வேலூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: குரங்குகள் இறப்பு - வனத்துறையினர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.