ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா..ஃபோனை ட்ராக் செய்து இருவரை தட்டித் தூக்கிய போலீசார்! - cell phone tracking - CELL PHONE TRACKING

தேனியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணின் தொலைபேசி தொடர்பை வைத்து ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்ட 10.5 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய போலீசார் இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார்
கைது செய்யப்பட்ட நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 6:14 PM IST

தேனி: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை அடியோடு தடுக்க வேண்டும் போலீசார் பல்வேறு வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார், பழைய கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் யாருடன் உரையாடுகிறார்கள்.

மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றார்களா? என்ற பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக போடி கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணின் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்களை கண்காணித்தனர்.

இதையும் படிங்க: தென் மாவட்ட பள்ளிகளில் பெருகும் சாதி மோதல்கள்; போர்க்களமாக மாறும் கல்விக் கூடங்கள்.. தீர்வு தான் என்ன?

ஏற்கனவே இவர் மீது கஞ்சா கடத்தல், விற்பனை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த கண்காணிப்பின் போது ஜோதி, திருப்பூரைச் சேர்ந்த குகேஷ்குமார் என்ற இளைஞருடன் கஞ்சா விற்பனை தொடர்பாக தொலைபேசியில் உரையாடியது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், சைபர் கிரைம் உதவியுடன் குகேஷ்குமார் போனை ட்ராக் செய்தனர். அதில் ஆந்திர மாநில திருப்பதியில் இருந்து தெரியவந்துள்ளது. பின்னர் அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு தேனிக்கு வந்துள்ளார்.

அப்போது குகேஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 10.5 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குகேஷ்குமாரிடம் இருந்து கஞ்சாவை வாங்க இருந்த போடியைச் சேர்ந்த ஜோதியை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் சுதாரித்துக் கொண்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டுத் தலைமறைவானார்.

இதனையடுத்து அவரை தேடி வந்த போலீசார் சூர்யா நகரில் பதுங்கி இருந்த ஜோதியைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜோதி மற்றும் குகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே போடி நகர் மையப்பகுதியில் ஆறு கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில் மீண்டும் கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.