ETV Bharat / state

ஆம்பூரில் துர்நாற்றம் வீசிய பிரியாணி விற்பனை - உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - biryani lovers

ஆம்பூரில் துர்நாற்றம் வீசிய பிரியாணி விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூரில் துர்நாற்றம் வீசிய பிரியாணி விற்பனை - வாடிக்கையாளர்கள் கோரிக்கை!

author img

By

Published : Jul 19, 2022, 10:10 PM IST

Updated : Jul 19, 2022, 11:04 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பிரியாணி உலகப்புகழ் பெற்றது. அதேநேரம் ‘ஆம்பூர் பிரியாணி’ என்ற பெயரில் பல கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்,சங்கரி என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கியுள்ளார்.

அந்த பிரியாணி துர்நாற்றம் வீசியதாகவும், இறைச்சியும் சரிவர வேகாமல் இருந்ததாகவும் கூறி, பிரியாணி வாங்கிய கடைக்குச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பிரியாணியை திருப்பிக்கொடுத்துவிட்டு பணத்தை திரும்பப்பெற்றுள்ளார். எனவே, ‘ஆம்பூர் பிரியாணி’ என்ற பெயரில் பல கடைகள் இயங்கி வரும் நிலையில், இதுபோன்ற ஓர் கடையில் செய்யும் தவறு, மற்ற பிரியாணி கடைகளுக்கும் அவப்பெயரைத்தருகிறது என அருகில் உள்ள பிற உணவகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுசம்பந்தமாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் இதுபோன்ற போலியான கடைகளில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'சேலத்தில் அசத்தலான அடுப்பில்லா சமையல்...': ருசி பார்த்து ஒரு பிடிபிடித்த செஃப் தாமு!

Last Updated : Jul 19, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.