தமிழ்நாடு முழுவதும் வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி பல்வேறு குடிநீர் ஆலைகள் செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திருப்பத்தூரில் இயங்கிவந்த ஐந்து நிறுவனங்கள், நாடறம்பள்ளியில் இயங்கிவந்த இரண்டு நிறுவனங்கள், வாணியம்பாடியில் இயங்கிவந்த இரண்டு நிறுவனங்கள், ஆம்பூரில் இயங்கி வந்த மூன்று நிறுவனங்கள் என மொத்தம் 13 நிறுவனங்களுக்கும் ஒரே நாளில் சீல் வைக்கப்பட்டது.
தனியார் குடிநீர் கம்பெனிகள் அரசு அனுமதி பெற்று நடத்த வேண்டும் அப்படி அனுமதி பெறப்படாமல் செயல்படுகிற அனைத்து தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து சீல் வைக்கப்படும் என பொறியாளர் கார்த்திகேயன், வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைப்பு