திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவர் விஜய், அண்ணன் தம்பிகளான 6 ஆம் வகுப்பு மாணவர் சூர்யா, 8 ஆம் வகுப்ப்பு மாணவர் ரபீக் ஆகியோர் ஒன்றாக கிரிசமுத்திரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதனிடையே, வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலையில் பாய்ந்தது. இவ்வாறு தறிக்கெட்டு ஓடிய அந்த கார், அவ்வழியாக சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அந்த மூன்று பள்ளி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த காரிலிருந்த ஓட்டுநர் உட்பட 2 பெண்களும் காரை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், இது குறித்து அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் அங்கு அலறியடித்த படி ஓடிவந்து சடலமாக கிடந்த தங்களின் பிள்ளைகளைக் கண்டு துடித்தனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவியர்களும் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த வாணியம்பாடி தாசில்தார், காவல் உதவியாளர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், இந்த சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து உடனடியாக, மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் உடல்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் கண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வேலூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5-க்கும் மேற்பட்டோர் வேலூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வளையாம்பட்டு பகுதியில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்கு காரை திருப்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதாகவும், இதில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்களிடம் வாணியம்பாடி காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக' தெரிவித்தார்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவத்துள்ளார். pic.twitter.com/lbxt1POasK
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவத்துள்ளார். pic.twitter.com/lbxt1POasK
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 28, 2023திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவத்துள்ளார். pic.twitter.com/lbxt1POasK
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 28, 2023
இதனைத்தொடர்ந்து, வாணியம்பாடி அருகே விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக கார் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ!