பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்; தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை. தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நான் அடிமை. எம்ஜிஆர் வழி வந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக ஓர் அணியில் திரள வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுக அலுவலகம் செல்வீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்; விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்குத் தெரியும்” எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சசிகலா நள்ளிரவு 12மணிக்கு சென்னை வந்தடைய வாய்ப்பு!