ETV Bharat / state

3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புடவைகள் பறிமுதல் - thirupattur new

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள  புடவைகள் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

author img

By

Published : Mar 13, 2021, 9:35 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கந்திலி பகுதியிலுள்ள சோதனைச் சாவடி பகுதியில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த மகேந்திரா பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், அனுமதியின்றி மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள புடவைகள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்திலுள்ள ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி முன்னிலையில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.