திருப்பத்தூர்: கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும், இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் ஆம்பூரை சுற்றியுள்ள மலைப்பகுதியிலிருந்து வரும் காட்டாறு வெள்ளத்தால் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலை, ஆம்பூர்-குடியாத்தம் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் வீடு இடிந்து 9 பேர் மரணம்: ஸ்டாலின் இரங்கல்