ETV Bharat / state

வன விலங்குகளை விரட்டச் சென்ற மாமன், மைத்துனர் மின்சாரம் தாக்கி பலி..! ஆம்பூர் அருகே நடந்த சோகம்..!

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் வன விலங்குகளை விரட்டச் சென்ற உறவினர்கள், விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

relatives went to chase away the wild animals in the agricultural land were electrocuted near Ambur
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:54 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்தில் வனவிலங்குகள் சேதப்படுவதாக கூறி, தனது மைத்துனர் வெங்கடேசன் என்பவருடன் விலங்குகளை விரட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

அப்பொழுது, ராம மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், வனவிலங்குகளை விரட்ட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதன் பின்னர், வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இருவரையும் தேடியுள்ளனர். அப்போது ராம மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சென்று பார்த்த போது, இருவரும் மின்வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் உடனடியாக அவரது உறவினர்கள் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வனவிலங்குகளை விரட்ட நிலத்திற்குச் சென்ற உறவினர்கள் இருவர், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளா பெண் குழந்தை கடத்தல் வழக்கில் திருப்பம்! தமிழகத்தை சேர்ந்த 2 பெண் உள்பட மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.