திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். டிராவல்ஸ் நடத்தி வரும் இவர், தனக்கு சொந்தமான கார் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை அதே பகுதியில் உள்ள நண்பரின் இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
லட்சுமி நகர் பகுதியில் அதிக அளவு எலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று (ஜனவரி 18) அதிகாலை வினோத் குமாரின் காருக்குள் ஊடுறுவிய எலிகள், அங்கிருந்த பேட்டரியை கடித்தன. இதனால் ஏற்பட்ட மின் கசிவினால் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து நாசமானது.
பின்னர் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது