ETV Bharat / state

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை தீவிரம்!

author img

By

Published : Apr 19, 2020, 2:49 PM IST

வேலூர்: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ரேபிட் டெஸ்ட் கிட்
ரேபிட் டெஸ்ட் கிட்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், சைதாப்பேட்டை, ஆகிய பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை தீவிரம்!

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை விரைந்து கண்டறியும் 400 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வேலூருக்கு வந்துள்ளன. இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குச் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் பார்க்க: ஒரே மருத்துவமனையில் 31 செவிலியர், 5 மருத்துவர்களுக்கு கரோனா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.