கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் களம் கண்டனர். கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் (6 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் நடையை கட்டினார்.
Half-century in the 1st innings ✅
— BCCI (@BCCI) October 1, 2024
Half-century in the 2nd innings ✅@ybj_19 is in tremendous touch! ✨
50 partnership up for the 3rd wicket
Live - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/BIetWz8KTF
இதனிடையே விராட் கோலி மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (51 ரன்) அரை சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 17.2 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராட் கோலி (29 ரன்), ரிஷப் பன்ட் (4 ரன்) கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கக்தேசத்தை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிரஸ் 2 விக்கெட்டும், தஜுல் இஸ்லாம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Rishabh Pant hits the winning runs 💥
— BCCI (@BCCI) October 1, 2024
He finishes off in style as #TeamIndia complete a 7-wicket win in Kanpur 👏👏
Scorecard - https://t.co/JBVX2gyyPf#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/Nl2EdZS9VF
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றது. அடுத்ததாக நியூசிலாந்து (3 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு (5 டெஸ்ட்) எதிரான மொத்தம் உள்ள 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3ல் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். அடுத்ததாக இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வரும் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறுகிறது
இதையும் படிங்க: இளம் கிரிக்கெட் வீரர் மர்ம மரணம்! என்ன நடந்தது? - Cricketer Dead