ETV Bharat / state

“மக்களை குழப்பும் எடப்பாடி பழனிசாமி”.. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பதிலடி! - Minister Durai Murugan - MINISTER DURAI MURUGAN

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் ,  எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் துரைமுருகன் , எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 1:44 PM IST

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு செய்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணை பலப்படுத்திய பின். அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 2006 அன்று ஆணையிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் ஜூன் 2021 ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து கேரள அரசு ஒத்துழைக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து நானும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஜீலை 2021ல் அளித்த கோரிக்கை மனுவில் அணையை பலப்படுத்த கேரள அரசிற்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அதன் பேரில், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சம்மந்தப்பட்ட கேரள அரசின் அதிகாரிகளுடன் இது குறித்து கடிதம் மற்றும் பல வழக்குகளின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில், தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (I.A. 28 of 2017) இது தொடர்பாக ஒரு கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு நவம்பர் 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையும் படிங்க: "கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தான் முதலமைச்சர் பதவி" - எடப்பாடி பழனிசாமி!

மேலும், நவம்பர் 2022 மற்றும் ஆகஸ்ட் 2023 ஆகிய நாட்களில் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து, மார்ச் 2022 அன்று கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழுவின் அறிவுரையின்படி டிசம்பர் 2022 மற்றும் மே 2023 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

மே, 2023 அன்று நடந்த கூட்டத்தை தொடர்ந்து, கேரள அரசு வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்வதற்கு ரூ.31.24 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அக்டோபர் 2023ல் தமிழ்நாடு அரசு, கேரள அரசிற்கு இத்தொகையை செலுத்தியது. தொடர்ந்து, தரைப்பாலம் சீரமைக்கும் பணி பிப்ரவரி 2024 அன்று தொடங்கப்பட்டு மே 2024ல் முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு கடிதங்களின் வாயிலாகவும், மேற்பார்வை குழு கூட்டங்களின் வாயிலாகவும், பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க தேவையான அனுமதி அளிக்க வலியுறுத்தி வருகிறது. மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும், போராட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்துஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.