திருப்பத்தூர் பகுதியில் வீர விளையாட்டு பயிற்றுவிக்கும் மையங்களில், பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் என்னும் தற்காப்புக்கலை பயிற்றுவிக்கும் மையமும் உள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு கராத்தே,சிலம்பம்,குங்பூ,பரதநாட்டியம்,வாள்வீச்சு போன்ற 15 வகையான தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளிப்பதக்கங்களும் வென்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இங்கு பயின்று ஐந்து வயதில் 5 வகையான புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனைப் படைத்த மாணவர்களும் உண்டு.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று(ஏப்ரல் 6) பெய்த கனமழையின் காரணமாக, இவர்களுடைய தற்காப்பு பயிற்றுவிக்கும் கலைக்கூடத்தில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக இங்கு இலவசமாக பயின்று வரும் 50-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தங்களது வெற்றியைப் பதிவு செய்துவைத்திருந்த சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகின.
இதன்காரணமாக, திருப்பத்தூரில் தாங்கள் பயிற்சி செய்ய தங்களுக்குத் தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு அம்மையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாள்வீச்சை மேம்படுத்த பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும் - வீராங்கனை பவானி தேவி