திருப்பத்தூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லை வனப்பகுதியில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி, இரவு பெய்த கனமழையால் நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ஆவாரம் குப்பம் வழியாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (ஜூலை 18) இரவு பெய்த மழை காரணமாக பாலாற்றில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏரளாமான மீன்கள் அடித்து வருவதால் அப்பகுதி மக்கள், சிறுவர்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பாலாற்றில் மணல் கொள்ளையால் ஆங்காங்கே 10 அடி முதல் 15 அடி வரை பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. அதில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன் பிடிக்கும் ஆர்வத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!