ETV Bharat / state

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜகவினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜகவினரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஆம்பூரில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜகவினரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்

author img

By

Published : Jun 10, 2022, 8:44 PM IST

திருப்பத்தூர் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுகூடினர்.

இவ்வமைப்பினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது UAPA பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி, நூபர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் புகைப்படம் கொண்ட உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜகவினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அப்பொழுது காவல் துறையினர் உருவ பொம்மையை அப்புறப்படுத்த முயற்சித்தபோது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'நாட்டுக்குத் துரோகம் இழைக்கிறது மத்திய அரசு': சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.