ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி

author img

By

Published : Oct 17, 2022, 7:12 PM IST

அரசு வேலை வாங்கி தருவதாக ஐந்தரை லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, இரவு காவலாளியாக பணியமர்த்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 5.50 லட்சம் பெற்று ஏமாற்றியதாக குடும்பத்துடன் தர்ணா

திருப்பத்தூர்: காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த மகாதேவன் மகன் வீர கார்த்திக். இவர் கூடப்பட்டு பகுதியில் இயங்கி வரும் C.2518 கூடப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

அண்ணனின் வேலையை தம்பிக் கருணை அடிப்படையில் பெற்றுத்தர வேண்டும் என கூறி, அவரது தம்பி சுரேஷ் பலரை நாடியுள்ளார். கூடப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெங்கடேசனிடம் ஒரு லட்ச ரூபாயும், அவருடைய உறவினரான மகேந்திரனிடம் 2 லட்சம் ரூபாய், மற்றும் இயக்குனர் ரத்தினத்திடம் 2 லட்ச ரூபாய், மற்றும் இதற்காக பேரம் பேசியவர்களுக்கு 50,000 என ஐந்தரை லட்சம் ரூபாயை இதுவரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக சுரேஷ் கூறுகிறார்.

இந்த நிலையில் அலுவலக உதவியாளர் வேலைக்காக வாங்கிய பணத்தில் தற்போது வரை இரவு வாட்ச்மேனாக தற்காலிக பணியாளராக சுரேஷ் பணியாற்றி உள்ளார்.மேலும் சுரேஷ் பலமுறை அலுவலக உதவியாளர் பணி வழங்க கோரி கேட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதால் ஆத்திரமடைந்த சுரேஷ் இன்று கூடப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்து வெங்கடேசனிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கட்டிட அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தர்ணாவில் அமர்ந்தார். தர்ணாவில் ஈடுபடும் போது சுரேஷுவின் தாயாரான ஜெயா திடீரென மயக்கம் அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: குளவி கொட்டியதில் 100 நாள் வேலைக்கு சென்ற 20 பேருக்கு காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.