திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ரெட்டி தோப்பு, கம்பிக்கொல்லை, மலைக்கிராமங்களான நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ரெட்டிதோப்பு ரயில்வே பாலச்சாலையை பயன்படுத்திவருகின்றனர்.
ஆனால், மழைக்காலங்களில் இப்பாலத்தின் கீழ் அதிக அளவிற்கு மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குவதால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனால் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சாலை வசதி மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி, கடைகள் அடைத்து இன்று (அக்.6) மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துண்டுப் பிரசுரம் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட சுவேதா அச்சகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திரா டூ சென்னை: மணலுக்குள் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை!