ETV Bharat / state

ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வராத மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் - திருப்பத்தூரில் ரணகளம்! - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

திருப்பத்தூர் ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வராத மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 4, 2023, 8:00 PM IST

ஆலங்காயம் ஒன்றிய குழு கூட்டம்

திருப்பத்தூர்: ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‌

இதில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் முழுமையாக வாசிக்கப்பட்டதோடு, தீர்மானங்களின் மீது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி பதிலளித்தார்.

அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் வேண்டாமணி பேசுகையில், “ஒரு புறம் வாணியம்பாடி நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், மற்றொரு பக்கம் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர் துர்நாற்றம் வருகிறது. இதனால், கிரிசமுத்திரம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மன்ற உறுப்பினர் சதாசிவம் பேசுகையில், “நிம்மியம்பட்டு பகுதியில் இருந்து 102 ரெட்டியூர் செல்லும் இடையில் காட்டுப் பகுதியில் முள் புதர்கள் வளர்ந்துள்ளதால் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முள் புதர்களை அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு அலுவலக வளாகத்தில் உள்ள காய்ந்த மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் அள்ளும் வாகனங்கள் பழுதாகி உள்ளது, சீர் செய்ய வேண்டும். மானாவாரி விதைக்க இதுவரையில் விதைகள் வழங்கப்படவில்லை. பருவ நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து உறுப்பினர் காயத்ரி பேசுகையில், “ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதானமான விவசாயம் வேர்க்கடலை பயிரிட்டு வருகின்றனர். வேர்கடலையில் கிடைக்கும் லாபத்தில் பாதிக்கு மேல் கூலி கொடுப்பதில் செலவாகி விடுகிறது. ஆகையால், வேர்க்கடலை பறிக்க இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

அப்படி நீங்கள் அலுவலகத்தில் இயந்திரங்களை வைத்திருந்து மக்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்தால் எந்த ஒரு பயனும் இல்லையே. இந்த முறை இயந்திரங்கள் மூலமாக வேர்க்கடலை பறிக்க அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார பகுதிகளில் விதைகள், தானியங்கள், காய்கறிகளை பதப்படுத்த வைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உறுப்பினர் கங்காதரன் பேசுகையில், “வளையம்பட்டு ஊராட்சி லாலா ஏரி பகுதியில் குடிநீருக்காக ரூபாய் 15 லட்சம் செலவில் கிணறு வெட்டியுள்ளது. அது பயனற்ற நிலையில் உள்ளது. பயன் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மன்ற உறுப்பினர் வசந்தி பேசுகையில், “வளையாம்பட்டு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது, கால்வாய் சரிவர எடுப்பதில்லை. சீரான குடிநீர் வழங்கவும், கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து உறுப்பினர் பிரபாகரன் பேசுகையில், “கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள சமுதாய கூடம் கட்டிட பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். செக்குமேடு பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான திருமண மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்றார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது - வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.