திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவர் அதே பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வத்துள்ளார். அதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குடிமகன்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்திரபுரத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து கந்திலி காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் அமர்நாத்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பெண் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி தீயிட்டுக் கொளுத்தினர்.
நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர் என்பதால் அப்பெண் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பினர்.