திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில் இயங்கிவரும் சிண்டிகேட் வங்கி முன்பாக வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து முதியோர் உதவித் தொகை பெறுவோர் மற்றும் வங்கியில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் தனி நபர் விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதன்பின்னர் வந்த காவல்துறையினர் பொதுமக்களை தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியும் ஒழுங்குபடுத்தியும் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: 'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கச் செல்லலாம்' - தமிழ்நாடு அரசு