திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலைகள் 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பகுதியில் சாலை நடுவில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியில் காவலர் ராகவேந்திரன் மற்றும் எஸ்.பி.தனிபிரிவு காவலர் திங்களன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுஇருந்தனர். தேசிய நெடுஞ்சாலை நடுவில் பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அப்பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை மீட்டு பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதிவேகமாக செல்லும் வாகனங்கள் நிறைந்த சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனைவியுடன் சேர்ந்த நண்பர்.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த காதலி தற்கொலை!