திருப்பத்தூர்: ஆம்பூர் கெங்காபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை வந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வீட்டில் நன்மை உண்டாக பூஜை செய்வதாகவும் இதற்கு வீட்டில் உள்ள தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் 4 சவரன் தங்க நகை இளைஞரிடம் மாந்திரீகம் செய்ய அளித்துள்ளார்.
பின்னர் 4 சவரன் தங்க நகையை கோவிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனவும் அப்பெண்ணை வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்றி விட்டு தங்கநகையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து கவிதா ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகைகளுடன் தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பேருந்து ஏ.சி. கோச்சில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் - பிடிபட்ட இருவர்