திருப்பத்தூர்:Arrested: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் காவல் நிலையங்களில் புகாரளிக்கத் தொடங்கினர்.
இதுவரை அவர் மீது 3 கோடி ரூபாய் வரை மோசடி புகார் பெறப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன், இருவர் தொடர்பில் இருப்பதாக காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பத்தூர் விரைந்த காவல் துறையினர், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன்,
ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: TamilNadu municipal corporation election: மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்