ETV Bharat / state

நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருடிய நபருக்கு தர்ம அடி! - Natrampalli super market theft issue

People Attacked Theft man: நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் மளிகைப் பொருட்களை திருடிய நபரை கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

People Attacked Theft man
சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை திருடிய ஆடைக்குள் மறைத்து வைத்த நபர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 2:27 PM IST

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை திருடிய ஆடைக்குள் மறைத்து வைத்த நபர்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெருவில் பெரியசாமி மகன் சாமுண்டி என்பவர், கார்த்திகா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (28) என்ற நபர், தினந்தோறும் இந்த கடைக்கு வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல் கடைக்கு வந்து சோப்பு, பேஸ்ட், எண்ணேய் போன்ற பொருட்களை திருடி, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துள்ளார். இதனை சிசிடிவி காட்சியின் வாயிலாக உரிமையாளர் சாமுண்டி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திருடிவிட்டு அந்த நபர் வெளியே வரும்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்து உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பொருட்களை கடையின் உரிமையாளர் கைப்பற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கலையரசனின் கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்களும், அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அப்போது அடிதாங்க முடியாமல் வலியால் துடித்த கலையரசன், அனைவரது கால்களிலும் விழுந்து "என்னை விட்டு விடுங்கள், எனது வாழ்க்கை போய்விடும், மன்னித்து விடுங்கள்" எனக் கூறு கதறி அழுந்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த தகவலின் பேரில் வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து கலையரசனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, கலையரசனை சிகிச்சை பெற்ற பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.