திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான சின்னவரிகம், வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த ஆறு மாதங்களாக தொடர் கொள்ளைச் சம்பவம் நடைப்பெற்றதையடுத்து, குற்றவாளியை பிடிக்க ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினர் குற்றவாளியை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் சின்னவரிகம் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிவதைக் கண்ட தனிப்படை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அந்நபர் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (40). கட்டட ஒப்பந்ததாராக பணியாற்றும் இவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட பணிக்கு ஆட்களை அனுப்பி வைத்து அப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பகல் நேரத்தியிலேயே பூட்டியிருக்கும் வீட்டில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சுப்பிரமணி மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அவரை ஆம்பூர் குற்றவியில் நீதிபதி ரவி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் வந்த அண்ணனின் கொடூர படம்.. அடுத்தது என்ன?