திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று (நவம்பர் 23) காலை பூஜை செய்வதற்காக வந்த பூசாரி, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் உண்டியலிலிருந்த பத்தாயிரம் ரூபாய் பணம், குத்து விளக்குகள் காணாமல்போய் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காரப்பட்டு என்னும் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட அம்மன் சிலைகள், 1000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (நவம்பர் 22) ஒரே நாளில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் உமராபாத் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: Hyundai Motor: 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஹுண்டாய் நிறுவனம்