திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நிர்மலா(50). இவரது கணவர் ராஜா(55). இவர்களுக்கு திருமணமாகி மகன்கள் வெளியூரில் உள்ள நிலையில், ராஜா மற்றும் நிர்மலா வீட்டில் தனியாக இருந்துவந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்.3) இவர்களது வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்த ஐந்து சவரன் தங்க நகையை திருடிச் சென்றனர். அதேபோல், அதே பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர் வீரபத்திரன் என்பவரது வீட்டிலும் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அடுத்தத்த திருடடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: முன் விரோதம் காரணமா?'