திருப்பத்தூர்: மாவட்டம் வளையாம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திரா நகர் 9-வது வார்டு வேட்பாளராக சீப்பு சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
இதனிடையே கிருஷ்ணனை கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வரும் 20ஆம் தேதி அவர் பதவி ஏற்க வேண்டும்.
இந்நிலையில் கிருஷ்ணனின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் தனது கணவர் மீது காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே அவரைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!