திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பாதாள சாக்கடைத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை ஏ - கஸ்பா குடியிருப்புப் பகுதியில் செயல்படுத்துவதாக நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து ஏ- கஸ்பா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், "இத்திட்டத்தை செயல்படுத்தினால் இப்பகுதி மக்களுக்கு பெரும் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும்.
ஏற்கெனவே தோல் கழிவுகளால் இப்பகுதியில் குடிநீர் மாசடைந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை இப்பகுதியில் நடைமுறைப்படுத்தாமல் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கஸ்பா பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வாயில் கறுப்புத் துணி கட்டி, முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து, ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் செளந்தரராஜனிடம் மனு அளித்தனர்.
மேலும் உடனடியாக இதுகுறித்து அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை