ETV Bharat / state

போன்-பே மூலம் ரூ.20,000 அனுப்பி நூதன மோசடி.. குவாட்டருக்கு ஆசைப்பட்டவரை சிக்க வைத்த மர்ம நபர்.. நாட்டறம்பள்ளியில் நடந்தது என்ன?

Natrampalli Phonepe cheating: நாட்றம்பள்ளியில் செல்போன் கடைக்காரரிடம் போன் பே (Phone Pe) மூலம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Natrampalli
செல்போன் கடைக்காரரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 7:56 PM IST

செல்போன் கடைக்காரரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த வாலூர் பகுதியைச் சேர்ந்த தசரதன் (35). இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பைக்கில் வந்த இருவர் செல்போன் மூலம் ரூ.20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும், கையில் பணம் தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய கடை உரிமையாளர், அவர் கொடுத்த செல்போன் நம்பருக்கு ரூ.20 ஆயிரம் போன் பே (Phone Pe) மூலமாக அனுப்பி உள்ளார். பின்னர், நபரிடம் ரூ.20 ஆயிரம் கேட்டபோது, ஏடிஎம் கார்டு மூலம் அருகே உள்ள ஏடிஎம்மில் எடுத்து தருவதாக கூறிவிட்டு, அவருடன் வந்த நபரை கடை அருகில் அமர வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின், சிறிது நேரம் கழித்து அந்த மர்ம நபருடன் வந்த நபரும், அங்கிருந்து நான் அவரைப் பார்த்து விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கூச்சலிட்டு அங்கிருந்து தப்ப முயன்றவரைப் பிடித்து உட்கார வைத்துள்ளனர்.

பின்னர், அவரிடம் விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (47) என்பது தெரிய வந்துள்ளது. இவர் டெய்லர் வேலை பார்த்து வருவதாக கூறி உள்ளார். மேலும், மதுபானக் கடையில் இருந்து அந்த மர்ம நபர் தன்னை கூட்டி வந்ததாகவும் எனக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் கடை உரிமையாளர் உடனடியாக வங்கிக்குச் சென்று மர்ம நபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்துப் பார்த்தபோது வங்கி கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் மும்பை ஏடிஎம் கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்துள்ளது. நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட நபருடன் வந்த நபரை பொதுமக்கள் நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையின் அடையாளமாக ஏ.வி. பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.. 138வது பிறந்தநாள் விழாவில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.