ETV Bharat / state

சேற்றில் சிக்கிய கார் - பிரியாணி சாப்பிட வந்தவர்கள் பரிதவித்த சோகம்

ஆம்பூரில் பிரியாணி சாப்பிட வந்தவர்களின் கார் கனமழையால் ஏற்பட்ட சேற்றில் சிக்கிய நிலையில் ஒருமணி நேரமாக போராடி பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 10, 2022, 7:14 PM IST

சேற்றில் சிக்கிய காரை மீட்ட பொதுமக்கள்

திருப்பத்தூர்: ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. அந்த சாலையோரம் பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.

மாண்டஸ் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆம்பூரில் உள்ள பிரபல பிரியாணிக்கடைக்கு பெங்களூரில் இருந்து கார் மூலம் ஐந்து பேர் வந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் வந்த காரை சாலையோரம் நிறுத்தி வைத்தபோது அதிக மழையினால் ஏற்பட்ட ஈரப்பதத்தின் காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளத்தில் காரின் முன்பக்கம் டயர் சிக்கி கொண்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்திலிருந்து பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்டனர்.

இதையும் படிங்க: Video: ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா - கேமராவைக் கண்டதும் வந்த நாணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.